ராதா மகளுக்கு நடந்த இரகசிய நிச்சயதார்த்தம் – வருங்கால மாப்பிள்ளை யாருன்னு பார்க்குறீங்களா?
நடிகை ராதா மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கின்றது என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.
நடிகர் ராதா
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் ராதா.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை ராதா சினிமாவில் இருக்கும் பொழுது கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
சினிமா வாய்ப்புகள் குறைந்து வரும் போது ராஜசேகரன் நாயர் என்பவரை ராதா திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இரகசிய நிச்சியதார்த்தம்
இதனை தொடர்ந்து இளைய மகளும் சினிமாவிற்குள் வந்தால் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
மேலும், தன்னுடைய வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனிடையே விரைவில் திருமணம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். “ ஏன் இவ்வளவு இரகசியமாக நிச்சியதார்த்தம்?” என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |