மகளுக்காக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்த பிரபலம்! திருமணத்தில் லீக்கான விவரங்கள்
ராதா மகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.
ராதா
தமிழ் சினிமாவில் 80-களில் பல கோடி ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா.
இவரின் சகோதரி அம்பிகாவை தொடர்ந்து கடந்த 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
ராதா நடித்த முதல் படமே ஹீட் கொடுத்த நிலையில் தமிழில் வாய்ப்பு குவிய ஆரம்பித்தது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமல்லாது ஷோபன் பாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் ஆகியோருடன் இணைந்து தெலுங்கிலும் நடித்து கொண்டிருந்தார்.
பிஸியாக நடித்து கொண்டிருந்த போது ஹோட்டல் தொழிலதிபர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு முற்றிலும் சினிமா வாழ்க்கையிலிருந்து விலகி விட்டார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவிற்கு திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், மகளுக்கு கிலோ கணக்கில் தங்கம் போட்டு அழகு பார்த்த ராதா எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கணவன் - மனைவி இருவரின் சொத்து மதிப்பு சுமார் 300 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.
இதனால் தான் கார்த்திகாவின் திருமணத்திற்கு அடுக்கு அடுக்காக நகை போட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்று ஏராளமான தகவல்கள் கார்த்திகா திருமணத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |