நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..பூகம்பம் கிளப்பிய ரச்சிதா- பதறும் ரசிகர்கள்

DHUSHI
Report this article
சீரியல் நடிகை ரக்ஷிதா இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரச்சிதா மகாலட்சுமி
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை ஆரம்பித்தார்.
இதனை தொடர்ந்து பிரபல டிவியில் ஒளிபரப்பான “ பிரிவோம் சந்திப்போம்” சீரியலின் மூலம் தமிழ் சீரியலுக்குள் நுழைந்தார்.
இந்த சீரியல் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடித்தார்.
“பிரிவோம் சந்திப்போம்” தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் பல வருடங்களாக இணைந்து வாழ்ந்த ஜோடி சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இறக்க வேண்டிய நேரம்...
கடந்த பிக்பாஸ் சீசனில் ரக்சிதா முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக விளையாடி வந்தார். இந்த சீசனில் அவருடைய கணவர் தினேஷ் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக விளையாடி வருகிறார்.
படங்கள், சீரியல் என பிஸியாக இருக்கும் ரக்சிதா அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் , "நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே என் வாழ்க்கையை நான் விரும்பும்படி வாழ விடுங்கள்" என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “ ரச்சிதா எதற்காக இப்படி சோகமாக போஸ்ட் போட்டிருக்கிறார். அப்படி என்ன சோகம் நடந்துவிட்டது” என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அத்துடன் கணவர் தினேஷுடன் இனி சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதை ரச்சிதா தனது பதிவுகள் மூலம் மறைமுகமாக உணர்த்தி விரும்புகிறாரா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
