பிறந்தநாளை காசியில் தெய்வீகமாக கொண்டாடிய ராஷிகண்ணா... என்ன இப்படி மாறிட்டாங்களே!
நடிகை ராஷிகண்ணா தனது பிறந்தநாளை காசியில் ஆன்மீகத்தில் மூழ்கியபடி தெய்வீகமாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ராஷிகண்ணா
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராசி கண்ணா.
2013 ஆம் ஆண்டு ஜான் ஆபிரகாம நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஷாலின் அயோக்கிய, ஜெயம் ரவியின் அடங்க மறு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், இறுதியாக தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.
இந்நிலையில் தனது பிறந்தநாளை சற்று வித்தியாசமாக காசியில் இறைவழிப்பாட்டுடன் தெய்வீகமான முறையில் கொண்டாடிய ராஷிகண்ணா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
