திருமணமான ஒரு வருடத்தில் காதல் கணவரை பிரிந்த பிரபல நடிகை... காரணம் என்ன?
பிரபல சீரியல் நடிகையான பிரியங்கா நல்காரி திருமணமான ஒரே வருடத்தில் காதல் கணவரை பிரிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியங்கா நல்கரி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமான நடிகை தான் பிரியங்கா நல்கரி. தற்போது நளதமயந்தி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகின்றார்.
பிரியங்கா ராகுல் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர். பின்பு சமாதானம் ஆகிய இருவரும் காதலித்த நிலையில், திருமணமும் செய்துள்ளனர்.
ஆனால் இவர்களின் குடும்பத்தில் பெற்றோர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இதற்கு பிரியங்கா கூறுகையில், தனது திருமணம் மலேசியாவில் நடைபெற்றது என்றும் அதனால் தான் குடும்பத்தினர் வரவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
காதல் கணவரை பிரிந்த பிரியங்கா
இவர் ரோஜா சீரியலைத் தொடர்ந்து சீதாராமன் சீரியலில் நடித்து வந்த நிலையில், அதிலிருந்து விலகினார். இதற்கு அவரது கணவர் தான் காரணம் என்று கூறப்பட்டது.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள பிரியங்கா தான் இப்போது சிங்கிளாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே பிரியங்கா தனது கணவரது புகைப்படத்தினை இன்ஸ்டாவிலிருந்து அழித்தது மட்டுமின்றி, அவரது கணவர் ராகுலும் எல்லா புகைப்படங்களையும் அழித்துள்ளார்.
தற்போது ரசிகர் கேட்ட கேள்விக்கும் இவர் சிங்கிள் என்று பதில் அளித்துள்ளது, இவரது பிரிவை உறுதிபடுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |