ஓரளவிற்கு மேல் தோலை காண்பித்து நடிக்க முடியாது... நடிகை பிரியங்கா மோகன் ஓபன் டாக்
நடிகை பிரியங்கா மோகன் தனது கிளாமர் ரோல் குறித்து பேசியுள்ளமை தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகை பிரியங்கா மோகன்
கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை பிரியங்கா மோகன்.
இதனையடுத்து இவர் தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். டாக்டர் படத்தில் மிகவும் வெகுளியான பெண்ணாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இதனையடுத்து, தமிழில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்தார். நடிகை பிரியங்கா மோகன் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
அடுத்ததாக தனுஷுடன் பிரியங்கா இணைந்து நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி எதிர்வரும் 12ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன் கிளாமர் ரோலில் நடிப்பதை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், என்னால் ஓரளவிற்கு மேல் தோலை காண்பித்து நடிக்க முடியாது. எல்லையை தாண்ட மாட்டேன். நான் ஏற்று நடிக்கும் ரோலில் இருக்கும் கிளாமர் யாரும் முகம் சுழிக்க முடியாத அளவு இருக்க வேண்டும் என்று பிரியங்கா மோகன்.
மேலும் திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த நடிகை பிரியங்கா மோகன் எனக்கு இப்போ எல்லாம் கல்யாணம் இல்ல. கல்யாணம் ஆகும்போது நான் உங்ககிட்ட சொல்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |