9 வருடங்கள் தொடர் பிளாப் படங்கள்..கணவருடன் நாட்டை விட்டு வெளியேறிய நடிகை- சொத்து மதிப்பு எவ்வளவு?
பாலிவுட்டில் தொடர் பிளாப் படங்களை கொடுத்த பிரியங்காவின் சொத்து மதிப்பு தொடர்பிலான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரியங்கா சோப்ரா
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதனை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். பிரியங்கா சினிமாவில் பிஸியாக இருப்பது போல் மாடலிங் துறையிலும் அதிக நாட்ட காட்ட கூடியவர்.
இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன் என்பவரை திருமணம் செய்து கெண்டார். குடும்பம், குழந்தை என வாழ்ந்து வந்தாலும் திரைப்படங்களிலும் கவனம் செலுத்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் பாலிவுட் சினிமாவில் கடந்த 9 வருடங்களாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது.
ஆனாலும் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பிரியங்கா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்திற்கு சுமாராக 14 - 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
இவரிடம் 75 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 620 கோடி) மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் இந்திய பணக்கார நடிகைகளில் இவரும் ஒருவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |