ரௌடி பேபியாக மாறிய வனிதா.. ஆசீர்வாதம் கொடுக்கும் பிரீத்தா - குடும்பத்துடன் நெகிழ வைத்த காட்சி!
ரௌடி பேபியாக மாறிய வனிதாவிற்கு மத்தியில் அவருடைய தங்கை ப்ரித்தா ஹரி அனைவரையும் ஆசீர்வாதம் கொடுத்து வருகிறார்.
விஜயகுமார்
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணியில் இருப்பவர் தான் நடிகர் விஜயகுமார்.
இவர் கோலிவுட் சினிமாவையும் சேர்த்து சுமாராக 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா என இரண்டு மனைவிமார்கள் இருக்கிறார்கள்.
இவர்களுள் முதல் மனைவியின் மூலம் கவிதா, அனிதா, அருண்விஜயும் இரண்டாவது மனைவியின் மூலம் வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவியும் ஆக 6 பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் மாத்திரம் சில குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக இருந்து வருகிறார்.
ஆசீர்வாதம் கொடுக்கும் ப்ரித்தா..
அதிலும் குறிப்பாக 2000 ஆண்டுகளில் ஒரு கனவு நாயகியாக இருந்தவர் பிரீத்தா. மாடல் உடையில் அனைவரையும் அசத்தி வந்த பீரித்தா இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது குழந்தை முகம் சென்று குடும்ப பெண்ணாகவே மாறி விட்டார். இவரின் புகைப்படங்களை பார்க்கும் பொழுது கையெடுத்து குடும்பிட வைக்கும்.
அந்த வகையில் தற்போது வெளியான வீடியோக்காட்சியில் ப்ரீத்தா, நெற்றி நிறைய குங்குமம் இட்டு, தள தள புடவை கட்டி பார்க்கவே ஒரு மகாலட்சுமியை பிரதிபலிக்கும் தோற்றத்தில் தான் காணப்படுகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரலட்சுமி விரதம் உலகளாவிய ரீதியில் தமிழ் பெண்களால் கொண்டாடப்பட்டது.
இதன்போது பூஜையில் கலந்து கொண்ட நடிகை சுஜா வருணி, ப்ரித்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், அக்கா ரௌடி பேபியாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் போது ப்ரித்தாவின் இந்த செயல் நெகிழ வைத்துள்ளது.