தமிழ் நடிகை மரணத்தில் புதிய திருப்பம் - சிக்கிய உல்லாச இயக்குநர்! தீவிர விசாரணை;
தமிழ் பட நடிகையான பவுலின் ஜெசிகா என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பவுலின் ஜெசிகா(29) ஒருவரை காதலித்து வந்தேன்.
அந்த காதல் கைகூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்.
எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என உருக்கமான கடித எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கி போலீசார், செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார்? என்பது குறித்து விசாரித்தனர்.
அதில் அவர், கடைசியாக சிராஜூதீன் என்பவரிடம் அதிக நேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது. ஆனால் தற்போது சிராஜூதீன் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் போலீஸ் விசாரணைக்கு வருவதாக அறிவித்தார்.

ஆசை வார்த்தை
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பவுலின் ஜெசிகாவை காதலித்து வந்த சிராஜிதீன் விரைவில் ஜெசிகாவை நாயகியாக வைத்து படம் எடுக்க போவதாக ஆசை வார்த்தை கூறி ஜெசிக்காவோடு நெருங் கி பழகி ஏமாற்றியதால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ஏமாற்றம்
இதனால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ஜெசிகா நீண்ட நேரம் செல்போனில் அவரிடம் கடைசியாக பேசிவிட்டு வாக்குவாததிலும் ஈடுபட்டு உயிரை மாய்த்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், அவர் தனது தங்கை பயன்படுத்தி வந்த ஐ-போனை காணவில்லை எனவும், சிராஜிதீனின் நண்பர் அதை எடுத்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டி உள்ளார். மேற்கொண்டு தீவிர விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.