நடிகையை கர்ப்பமாக்கி நாசமாக்கிய இயக்குநர்- பகீர் கிளப்பிய பூனம் கவுர்
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநர், நடிகையொருவரை கர்ப்பமாக்கி அவரின் வாழ்க்கைய நாசமாக்கியதாக நடிகை பூனம் கவுர் பகிர்ந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பாலியல் தொல்லைக்கு எதிரான நடவடிக்கை
தற்போது சினிமாத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது தொடர்பான குழுமம் அமைத்து விசாரித்து வருகிறார்கள்.
இதன்படி, மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமைளில் ஒரு குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த மாதம் தாக்கல் செய்த விசாரணையில், மலையாள சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதாகவும், படப்பிடிப்பு தளத்தில் பலவிதமான சங்கடத்தை சந்திப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை வெளியிட்ட புகார்
இந்த நிலையில், கடந்த 2007ம் ஆண்டு வெளியான “நெஞ்சிருக்கும் வரை” திரைப்படத்தில் நடிகர் நரேனுக்கு ஜோடியாக அறியப்பட்டவர் தான் நடிகை பூனம் கவுர்.
இந்த படத்தை தொடர்ந்து, பயணம், விஷாலுடன் வெடி, என் வழி தனிவழி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகையாக பயணத்தை ஆரம்பித்த நடிகை பூனம் கவுர், தற்போது காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், “ பஞ்சாப் நடிகை ஒருவரின் வாழ்க்கையை இயக்குநர் ஒருவர் நாசமாக்கி விட்டார். இதனால் அவரின் சினிமா வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தெலுங்கில் பிரபல இயக்குநராக இருக்கும் அவருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் தகுந்த விசாரணைகளை நடத்தியது. ஆனாலும் தேவையில்லாமல் இந்த சர்ச்சையில் நானும் இடையில் இழுக்கப்பட்டேன்...” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. இருந்தாலும் பிரபலங்களின் பெயர் குறிப்பிட்டாமல் வெளியான பதிவு என்பதால் தொடர்புப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |