பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கின்றாரா பூஜா ஹெக்டே ?
தமிழ் திரையுலகில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
பீஸ்ட் படத்தின் பின்னர் தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் கிரங்கடித்தது. இந்த பாடலுக்கு பின்னர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இவரின் பெயர் பிரபல்யமாகியது.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களை பரபரப்பாக்கியுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த தகவல் குறித்து பூஜா ஹெக்டே தரப்பில் உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |