பிரபல நடிகையானாலும் குழந்தை போல் பூஜா ஹெக்டே செய்த செயல்... வைரலாகும் காணொளி!
நடிகை பூஜா ஹெக்டே"சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பது போன்று உணரவைக்கும். அதில் ஒன்று தான், பார்லே - ஜி பிஸ்கட்டை டீ-யில் நினைத்து சாப்பிடுவது" என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைராகி வருகின்றது.
பூஜா ஹெக்டே
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ராசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்னை பெற்றார்.
ஆனால் அதனை தொடர்ந்து பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.
தெலுங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் தமிழ் ரசிகர்களையும் கிறங்கடிக்கும் வகையில் இருந்தது. இந்த பாடலில் இவரின் நடனத்துக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.
சூர்யாவோடு, ரெட்ரோ படம். விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான கூலி படத்தில் ஒரு நடனத்தில் பங்கேற்பதுடன், கேமியோ கதாபாத்திரமாகவும் வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பூஜா ஹெக்டே"சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பது போன்று உணரவைக்கும்.அதில் ஒன்று தான், பார்லே - ஜி பிஸ்கட்டை டீ-யில் நினைத்து சாப்பிடுவது" என குறிப்பிட்டு குழந்தை போல் மகிழ்சிச்சியாக பிஸ்கட் சாப்பிடுவதை காணொளியாக வெளியிட்டுள்ளார். குறித்த காணொளிக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |