மரியான் பட நடிகையா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!
நடிகை பார்வதி திருவோத்தின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றது.
பார்வதி திருவோத்து
கேரளாவைச் சேர்ந்த நடிகை பார்வதி மேனன், பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மேனன் என்பது சாதி பெயரை குறிப்பதால் தனது பெயரை பார்வதி திருவோத்து என மாற்றிக்கொண்டார்.
பூ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய வித்தியாசமான நடிப்பிற்காக அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் பார்வதி, தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் என பல படங்களில் நடித்திருக்கின்றார். குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
நீண்ட நாட்களாக தமிழ் திரையுலகின் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை பார்வதி திருவோத்து தங்கலான் படத்தில் விக்ரமின் மனைவியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பார்வதி திருவோத்தின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |