Photo album: ஹாலிவுட் ரேஞ்ச்க்கு இறங்கி ஓவியா.. என்னவொரு அழகு பாருங்க
ஹாலிவுட் திரைப்பட நடிகைகள் அளவுக்கு இறங்கிய ஓவியாவின் புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகை ஓவியா
தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் உருவான “களவாணி” படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஓவியா.
இவர் ஒரு கேரள நடிகை, முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
இதன்படி, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, ஜில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம், சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆக்டிவாக இருந்து காலத்தில் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக கிளாமர் மற்றும் க்யூட்டான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வார்.
இப்படி வெள்ளி திரையில் வெற்றி காணும் நடிகையாக இருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே திரண்டன.
நம்ம ஓவியாவா இது?
இந்த நிலையில் அங்கு நடந்த சில கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் 90ml திரைப்படத்தில் நடித்தார்.
இந்த படம் சர்ச்சை படமாக மாறியதுடன் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர், தமிழில் நடிகை ஓவியாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது சினிமாவிற்கு ரீ- என்றி கொடுக்கும் ஓவியா, ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஓவியா வாயில் புகையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |



