40 வயதில் காதலனை கரம்பிடிக்கும் நிலா: திருமணம் எப்போது?
தமிழ்ப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிலா விரைவில் காதலனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினரான மீரா சோப்ரா, தமிழில் நிலா என்ற பெயரில் அறிமுகமானார்.
அன்பே ஆருயிரே படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடி நடித்தார், தொடர்ந்து மருதமலை, ஜாம்பவான் போன்ற படங்களில் நடித்தார்.
அடுத்ததாக தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தாலும் சினிமா இவருக்கு எதிர்பார்த்த புகழை பெற்றுத்தரவில்லை.
இதனால் தந்தையுடன் இணைந்து ஹொட்டல் தொழிலில் கவனம் செலுத்தி வந்தார், சில ஆண்டுகளுக்கு பின்னர் பாலிவுட், வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது காதலனை கரம்பிடிக்க முடிவெடுத்துள்ளார், கடந்த 3 ஆண்டுகளாக ரஷித் என்பவரை காதலித்து வருகிறார் நிலா.
மார்ச் 12ம் திகதி ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், திருமண சடங்குகளில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணம் முடிந்த கையோடு தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதுப்பெண் நிலாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |