ஆழ்ந்த நித்திரையில் மகன்... நயன்தாரா செய்த காரியத்தை பாருங்க
நடிகை நயன்தாரா தனது மகனுக்கு முத்தம் கொடுக்கும் காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில், ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை கட்டிப்போட்ட இவரின் இரண்டாவது படம் ரஜினிகாந்த் உடன் நடித்தார். பின்பு அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது வரை முன்னணி நடிகையாகவே வலம் வருகின்றார்.
சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் காதல் என்று சர்ச்சையில் சிக்கிய இவர், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்ததோடு, இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்களும் உள்ளனர்.
மகன்களுடன் நயன்தாரா
தற்போது நயன்தாரா மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தனது மகனுடன் காரில் பயணிக்கும் காட்சியை வெளியிட்டுள்ளார். குறித்த காட்சியில் தனது மகன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் நிலையில், ஆசையாக முத்தமிட்டு தனது பாசத்தை வெளிக்காட்டியுள்ளார்.
😇Bliss👩👦 pic.twitter.com/A7HTcZrLdG
— Nayanthara✨ (@NayantharaU) February 11, 2024