Photo Album: வெளிநாட்டுக்கு பறந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்.. ஒற்றை பதிவால் குவியும் கமெண்ட்ஸ்
தனுஷ் சர்ச்சைக்கு பின்னர் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மகன்களுடன் பாரிஸ் சென்றுள்ளனர்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.
இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்த நிலையில், புதுமணத் தம்பதியினராக இருந்த நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்களும் தற்போது உள்ளனர்.
இவர்களின் திருமணம் வீடியோ வெளியிடுவதில் பாரிய சிக்கல்கள் கிளம்பினாலும் ரசிகர்கள் ஆவலுடன் தேடிப்பார்க்கும் ஆவணப்படமாக அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா குடும்பத்துடன் பாரிஸ் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள நயன்தாராவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட்டுக்களை அள்ளக் குவித்து வருகின்றனர்.