Photo Album: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அன்பான அம்மாவாக உணர்ந்த தருணம் நடிகை நயன்தாரா
தன்னுடைய மகனுக்கு அன்பாக முத்தம் கொடுத்து அவர்களுடன் பேசி விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
சினிமாவை போல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா அடிக்கடி கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவருடைய இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்வார்.
அந்த வகையில் மகனுடன் ஹோட்டலில் கொஞ்சி மகிழ்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை நெட்டிசன்கள் “இது போன்று சந்தோஷமாக இருக்க வேண்டும்...” என ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |