எகிறும் ஜெயம் ரவி விவகாரம்- தரமான பதிலடிக் கொடுத்த கெனிஷா- இது தேவையா?
ஜெயம் ரவி பற்றிய கேள்விக்கு கெனிஷா தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
நடிகர் ஜெயம்ரவி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஜெயம்ரவி.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி - ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிக்கையொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை தொடர்ந்து ஜெயம் ரவி பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளன.
அந்த வகையில், பெங்களுரை சேர்ந்த பாடகி கெனிஷா பிரான்சிஸ், ஜெயம் ரவியுடன் ரகசிய உறவில் இருப்பதாக செய்திகள் வைரலாகி வருகின்றன.
காட்டமான பதில் கொடுத்த கெனிஷா
இந்த நிலையில், ஒரு ரசிகர் ஒருவர் ட்ரோல் செய்யும் விதமாக, கெனிஷாவின் பதிவில், “ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்வியால் கடுப்பான பாடகி கெனிஷா, “நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்களது கீழ்த்தரமான சிந்தனைகளில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபர் தானா?..” என காட்டமாக பதிலளித்துள்ளார்.
பாடகி கெனிஷாவின் இந்த பதிவு ஜெயம் ரவி- ஆர்த்தியை பற்றி மோஷமான பதிவிற்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |