எனக்கும் விக்கிக்கும் நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டது... பொதுமேடையில் உண்மையை உடைத்த நயன்தாரா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக திருமணம் செய்யாமல் காதலித்து ஊர் சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனையடுத்து, அடிக்கடி சமூக வலைத்தளத்தில், புகைப்படத்தை பதிவிடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சேர்ந்து, ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நடிகை நயன்தாரா கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா தனது கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து பேசியுள்ளார்.
இது தனது நிச்சயதார்த்த மோதிரம் என கூறியுள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படம் வரும் 13-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியாக ‘லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்குகிறார். மேலும் நயன்தாராவின் ரசிகைகள் பலர் இந்த நிகழ்ச்சியில்கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, நயன்தாரா கையில் அணிந்திருக்கும் மோதிரம் குறித்து கேட்க, ‘இது தனது என்கேஜ்மெண்ட் ரிங்’ என்கிறார் நயன்தாரா.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.