கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நயன்தாரா- மகன்களுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நயன்தாரா குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.
இவரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட “Nayanthara: Beyond the Fairy Tale” என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த படத்தில் வரும் சில காட்சிகளையும், பாடல்கள் மற்றும் இசை உள்ளிட்டவைகளை ‘நானும் ரெளடி தான்’ படத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு வருடங்கள் தாமதமாக்கியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அந்த 3 செக்கன் வீடியோவிற்கு தனுஷ் தரப்பிலிருந்து 10 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் வாதிடப்படவுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கும் படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகளவில் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை மகன்களுடன் நயன்தாரா கொண்டாடியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் அவர்களுக்கு கொடுத்த பரிசுகளை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவின் குடும்பத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |