அச்சு அசலாக அம்மாவை போலவே இருக்கும் மகன்! லைக்குகளை குவிக்கும் நயனின் பதிவு
நடிகை நயன்தாராவின் சிறுவயது புகைப்படம் மற்றும் அவரின் மகனின் தற்போதைய புகைப்படமும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதை நயன்தாரா தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா
திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.
சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளதுடன் வசூலையும் குவித்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் முடித்த நயன்தாராவுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா சமூக வளைத்தளங்களிம் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் நயன்தாராவின் சிறுவயது புகைப்படம் மற்றும் அவரின் மகனின் தற்போதைய புகைப்படம் ஆகியன அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதை நயன்தாரா தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவு இணையத்தில் இணைத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டுவருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |