அரை முழம் பூவுக்கு லட்சத்தில் அபராதம்- பிரபல நடிகைக்கு வந்த சோதனை
பிரபல நடிகையொருவருக்கு ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூ வைத்திருந்த காரணத்திற்காக லட்சத்தில் அபராதம் விதிக்கபட்டுள்ளது.
நடிகை நவ்யா நாயர்
மலையாள திரையுலகத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் நடிகை நவ்யா நாயர்.
இவர், தமிழ் சினிமா‘அழகிய தீயே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அம்ரிதம், மாய கண்ணாடி, ஆடும் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது சில கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இதற்கிடையில், சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
லட்சத்தில் அபராதம் விதிப்பு
இந்த நிலையில், குடும்பம் குழந்தை என வாழ்ந்து கொண்டிருக்கும் நவ்யா நாயர் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
அப்போது சுமார் 15 செ.மீ. அளவு கொண்ட மல்லிகைப்பூவை கொண்டு சென்றாதால் அவருக்கு மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய நவ்யா, “ தனக்காக தந்தை கொடுத்த மல்லிகைப்பூவை இரண்டாக பிரித்து பாதியை தலையிலும், இன்னொரு பாதியை கைபையிலும் வைத்திருந்தார்..” எனக் கூறினார்.
ஏனெனின், ஆஸ்திரேலியாவில் உயிரியல் பாதுகாப்பு (Biosecurity) சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் தான் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்படும் பூக்கள் அல்லது தாவரங்களில் இல்லாத பூச்சிகள், நோய்க்கிருமிகள் அல்லது களை விதைகள் போன்றவைகளை அந்த நாட்டு அரசாங்கம் தடைச் செய்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
