உங்க சைஸ் என்ன? ரசிகர் கேட்ட ஆபாச கேள்விக்கு நச்சென்று பதிலளித்து பிரபல நடிகை..
பிரபல நடிகையிடம் ரசிகர் ஒருவர் மார்பக அளவைக் கேட்டுள்ளதற்கு நடிகை தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நந்திதா தற்போது தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நந்திதா ரசிகர்களின் சுவராசியமான கேள்விகளுக்கும், முகம்சுழிக்கும் கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில், உங்களுடைய சைஸ் என்ன? நெட்டிசன் ஒருவர் முகம் சுழிக்கும் கேள்வியினை எழுப்ப அதற்கு நந்திதா, இந்த கேள்வியை நீங்கள் ஏன் உங்கள் அம்மாவிடமோ, சகோதரியிடமோ, தோழிகளிடமோ கேட்கக்கூடாது? அவர்களிடம் கேட்டால் உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும் என்று பதிலடி கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் திரையரங்கில் பார்த்த தனக்குப் பிடித்த திரைப்படம் ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
மேலும் அவர் தனது பெற்றோருடன் குழந்தையாக இருந்த போதும், பள்ளிப்பருவத்தில் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.