விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் இளைஞர்- தப்பியோடிய நடிகை
இளைஞர் மீது விபத்தை ஏற்படுத்தி விட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பியோடிய நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை நந்தினி காஷ்யப்.
இவர் ருத்ரா என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் குவஹாத்தி பகுதியில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது குவஹாத்தி நகராட்சி (ஜி.எம்.சி) தெரு விளக்குகளை பழுதுபார்த்துக் கொண்டிருந்த தொழிலாளியொருவர் மீது கார் மோதியதாக சொல்லப்படுகிறது. 28 வயதான குறித்த இளைஞர் விபத்தில் பலத்த காயமடைந்திருக்கிறார்.
தப்பியோட்டம்
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய பின்னர் காயமடைந்த இளைஞருக்கு உதவிச் செய்யாமல் குறித்த நடிகை சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அதே சமயம் இன்னும் சிலர் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில் நடிகை நந்தினி காஷ்யப் தனது சொகுசு வாகனத்தை கஹிலிபாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைக்க முற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர்.
இவ்வளவு வேலைகளை பார்த்த நடிகை நந்தினி கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார்.
உயிருக்கு போராடும் இளைஞர்
இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இரண்டு கால்களும் முறிந்த நிலையில், இடுப்பு மற்றும் கை எலும்புகள் உடைந்துள்ளன.
மேலும், தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை ஐசியூவில் வைத்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதுடன், குறித்த ரசிகர்கள் மீது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
