ஜிவி பிரகாஷை தொடர்ந்து நடிகை நமீதா காதல் கணவரை பிரிகிறாரா? அவரே உடைத்த உண்மை
நடிகை நமீதா தனது காதல் கணவரை பிரிய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை நமீதா
கேப்டன் விஜயகாந்த் நடித்த அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நமீதா. பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவரது கவர்ச்சியான உடைக்கும், நடனத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். உச்ச நடிகையாக இருந்த இவர், ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகமானதால் சினிமாவை விட்டுச் சென்றார்.
கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட நமீதாவிற்கு 2022ம் அண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது அரசியலிலும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் நடிகை நமீதா தனது காதல் கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் தனது காதல் மனைவியை பிரிந்த நிலையில், நமீதாவின் இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
குறித்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதையடுத்து இதுவரை மௌனம் காத்து வந்த நமீதா தற்போது உண்மையை உடைத்துள்ளார்.
நமீதா பதிலடி
நமீதா கூறுகையில், எங்களைப் பற்றிய விவாகரத்து வதந்தி வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன்.
ஆனாலும் நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக வதந்தி பரவி வருகின்றது. எதை வைத்து இதுபோன்ற செய்திகளை வெளியிடுகின்றனர் என்பது புரியவில்லை.
நடிகையான பின்னர் நிறைய வதந்திகளை பார்த்துவிட்டதால், நானும் என் கணவரும் இந்த விவாகரத்து வதந்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை” என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |