பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை நட்சத்திரா... வெளியான புகைப்படம்
பிரபல சீரியல் நடிகை நட்சத்திரா கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
யாரடி நீ மோகினி நட்சத்திரா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து ரசிகர் மத்தியில் பெரும் பிரபலமானாவர் தான் நட்சத்திரா. தமிழில் 2016ம் ஆண்டு கிடாரி பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், பின்பு சீரியல் பக்கம் திரும்பினார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்ஷத்ரா மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதுடன், திருமணத்திற்கு பின்பும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'வள்ளி திருமணம்' என்கிற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வந்தார்.
குறித்த சீரியல் கடந்த டிசம்பர் மாதம் முடிந்த நிலையில், கர்ப்பமாக இருந்த இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை பிடித்தவாறு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |