18 வருஷமா எனக்கு தகுதி இல்லையா? கொந்தளித்த நடிகை நக்மாவின் சர்ச்சை ட்வீட்!
மாநிலங்களாவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காததை பற்றி நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான நக்மா அதிப்தியை வெளிப்படுத்திய தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாநிலங்களவையில் 57 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 22-ம் தேதி முடிவடைகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முடிவடைகிறது. தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வந்தன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.
இதனிடையே உத்தரபிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப்கார்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மராட்டிய காங்கிரஸ் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனக்கு தகுதி இல்லையா?
இதற்கு நடிகை நக்மாவும் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அந்த பதிவில், ‘2003-04ல் நான் காங்கிரஸில் நான் இணைந்தபோது, நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்போது தலைவர் சோனியா காந்தி, என்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதியளித்திருந்தார்.
அதன் பிறகு இப்போது 18 வருடங்கள் ஆகிவிட்டபோதும் கூட இன்னும் ஒரு வாய்ப்பை கூட அவர் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், மஹாராஷ்டிரா மாநிலங்களவையில் இம்ரானுக்கு இடமளிக்கப்படுகிறது.
நான் கேட்கிறேன், நான் என்ன குறைவான தகுதியுடையவளா ?' என்று பதிவிட்டுள்ளார். நக்மாவின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், நக்மா பாஜகவில் சேரப்போவதாக தகவல்களும் வெளியாகி உள்ளது.
SoniaJi our Congress president had personally committed to accommodating me in RS in 2003/04 whn I joined Congressparty on her behest we weren’t in power thn.Since then it’s been 18Yrs they dint find an opportunity Mr Imran is accommodated in RS frm Maha I ask am I less deserving
— Nagma (@nagma_morarji) May 30, 2022