Photo Album: எவர்கிரீன் குயின் நதியாவா இது? வயசானாலும் இளமை மாறாத தோற்றம்
57 வயதாகியும் நடிகை நதியா இளம் நடிகை போல் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை நதியா
தமிழ் சினிமாவில் 80-பது மற்றும் 90-களில் காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நதியா. இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு நதியாவிற்கு வழங்கப்பட்டது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நதியா டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார்.
90 காலப்பகுதியில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்டோருடன் நடித்திருக்கிறார்.
அத்துடன் நடிப்பை தாண்டி புது வகையான டிரஸ், ஹேர் ஸ்டைல், கம்மல், போட்டு இளம் வயது பெண்களையும் கவர்ந்தார்.
இந்த நிலையில், முன்னணி நடிகையாக இருக்கும் பொழுது சிரீஸ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
எவர்கிரீன் குயின்
கடந்த 1988ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. அதன் பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
நதியாவின் பிள்ளைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்குள் ரீ- என்றி கொடுத்தார். அன்று முதல் இன்று வரை பார்ப்பதற்கு ஓரே மாதிரி தான் இருக்கிறார்.
பேச்சு, ஆடை, அழகு, எடை இப்படி எதிலும் மாற்றம் இல்லை. உடல் நிலை சீராக வைத்திருக்கிறார் என்பது அவரை பார்க்கும் போதே விளங்குகின்றது.
இப்படியொரு நிலையில் சமீபத்தில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் “ எவகிரீன் குயின் ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |