மெக்காவுக்கு புனித பயணம் செய்த நடிகை குஷி பட நடிகை! வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகை மும்தாஜ் மெக்கா நகருக்கு புனித பயணம் சென்றுள்ளதாக அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா பயணம்
குஷி, சாக்லேட், வீராசாமி, பட்ஜெட் பத்மநாபன், சொன்னால்தான் காதலா, மகா நடிகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.
போகப்போக சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மாற்றிக் கொண்டார்
அதுமட்டுமின்றி கட்டிப்பிடி கட்டிப்பிடிடா, மல்லே மல்லே பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.
பிக்பாஸ்
இதன்படி முதன் முறையாக மும்தாஜ், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது மனதையும் வென்றவர்.
அப்போது மும்தாஜ் ஆர்மிகள் மிக பிரபலமாக இருந்தது. இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
அதன் பின் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
புனித பயணம்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வப்போது தன்னுடைய குடும்பம், ட்ராவல், புதிய போட்டோஷூட் போன்ற பல புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் மெக்காவிற்கு புனித பயணம் சென்றுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை கண்ணீர் மல்க வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது,
தற்போது மெக்காவில் இருக்கிறேன். அனைவருக்காகவும் இங்கு நான் பிரார்த்தனை செய்கிறேன். பூமியில் எனக்கு மிகவும் பிடித்த மெக்காவுக்கு புனித பயணம் செய்துள்ளேன். என்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
நான் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்து விடுங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தாருங்கள் என கண்ணீர் மல்க இறை வழிபாடு நடத்தியுள்ளேன்.
தற்போது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
image - Instagram