மாதவிடாய் நேரத்திலும் காம வெறியில் சிலர்.. படத்திற்காக துயர வாழ்க்கை அனுபவித்த மிருணாள் தாகூர்!
'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூர், பாலியல் தொழிலாளர்களின் உச்சகட்ட துயர வாழ்க்கை பற்றி, கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட தகவல், சமூக வலைதளத்தில் மீண்டும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
மிருணாள் தாகூர்
தமிழில் 'சீதா ராமம்' என்ற படத்தில் பிரபலமான மிருணாள் தாகூர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக தன்னுடைய நடிப்பு பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர். இதனை தொடர்ந்து ராத்தி திரைப்படத்தில் 2014-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
இயக்குனர் சோனியா குப்தா 2018 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலாளர்கள் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட 'லவ் சோனியா' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில், மிருணாள் தாகூரை அறிமுகம் செய்தார்.
இந்த திரைப்படத்திற்காக மிருணாள் தாகூர் பாலியியல் தொழில் செய்யும் பெண்களுடன் சுமாராக 2 வாரங்கள் தங்கியிருந்து அவர்களின் துயரங்கள், தினசரி வாழ்க்கை முறை, அவர்கள் பேசும் விதம் , நடந்து கொள்ளும் விதம் என அனைத்தையும் பற்றி தெரிந்து கொண்ட பின்னரே இப்படத்தில் நடித்தார்.
படத்திற்காக அனுபவித்த கொடுமைகள்
அப்போது அங்கு நடந்த கொடுமையாக விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “ வீடுகளில் கட்டில்கள் உயரமாக இருப்பதற்கான முக்கிய காரணம் அவர்கள் கஸ்டமர்களை பார்த்து கொண்டிருக்கும் பொழுது அவர்களின் குழந்தைகள் கட்டில்களுக்கு கீழ் உறங்குவார்களாம்.
பாலியல் தொழிலில் இருக்கும் பெண்கள் அந்த தொழிலை விருப்பட்டு தான் செய்கிறார்களாம். அவர்களை காப்பாற்ற யாரும் வர போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
மேலும் அவர்களுக்கு எந்தவிதமான உணர்ச்சிகளும் இருக்காது. ஒரு நாளைக்கு 30-40 வரையிலான ஆண்களை பார்ப்பார்களாம். தங்களிடம் இருக்கும் உணர்ச்சிகளை கொட்டி விட்டு செல்வார்களாம்.
மாதவிடாய் காலங்களிலும் இந்த துயரம் தொடரும்..” என பாலியல் தொழில் செய்யும் பெண்களின் கதையை கவலையாக கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இணையவாசிகளின் கவனங்களை ஈர்த்துள்ளது.
அத்துடன் , “ இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |