பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே அழைப்பு.. 5-வது சீசனில் கலக்குவாரா இந்த நடிகை?
டப்ஸ்மாஷ், டிக்டாக் என வீடியோவின் ஆரம்பகால பிரபலம் என்றால் அது மிர்னாலினி தான்.
இவர், தற்போது தமிழ் சினிமாவில் சமுத்திரகனி மற்றும் சசிகுமார் இணைந்து நடித்து இருக்கும் எம்ஜிஆர் மகன் படத்தில் நாயகியாக நடித்து இருக்கின்றார்.
இதனிடையே, ரசிகர்களிடையே மிகவும் ஆவலாக எதிர்பார்த்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான்... எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக எந்தவித அப்டேட்டையும் பிக்பாஸ் தரப்பில் இருந்து வெளியிடாமல் உள்ளனர்.
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தால் யார் எல்லாம் கலந்துகொள்வார்கள் என ஒரு கருத்து கணிப்பே இணையத்தில் உலா வருகிறது.
அந்த வகையில், பிக்பாஸில் முதல் சீசனில் இருந்து போட்டியாளராக கலந்துகொள்ள அழைக்கப்பட்டு வருபவர் தான் மிர்னாலிணி. தற்போது ஐந்தாவது சீசனிலாவது இவர் கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.