திடீரென நிச்சயதார்த்தை நிறுத்திய தனுஷ் பட நடிகை- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாலிவுட் நடிகையான மெஹ்ரீன் பிர்சாடாவுக்கும், அரசியல் பிரமுகரான் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்போது மெஹ்ரீனே தனது திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட் நடிகையும் மாடல் அழகியாகவும் இருந்து வருபவர்தான் மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தெலுங்கு, இந்தி ஆகிய பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.
மேலும், தமிழில் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றார். இதையடுத்து, சமீபத்தில் மெஹ்ரீன் பிர்சாடாவுக்கும், அரசியல் பிரமுகரான் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தின் மூலமாக தகவல் தெரிவித்து இருக்கும் மெஹ்ரீன், தங்களது திருமண முடிவை முறித்து கொள்ள இருவரும் சேர்ந்து முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இத்தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
