தமிழ் புத்தாண்டில் ஜிமிக்கி பெண்ணாக ஜொலித்த மீனா! வாயடைத்துப் போன ரசிகர்கள்
நடிகை மீனா புத்தாண்டு தினத்தை கொண்டாடி பட்டு புடவையுடன், சிலை போன்று ஜொலிக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் லைக்ஸை குவித்து வருகின்றது.
நடிகை மீனா
நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மீனா.
இவர் ரஜினியுடன் பலபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஹீரோயினாகவும் நடித்தார். ஆம் 1990ம் ஆண்டு தமிழில் ஒரு புதிய கதை என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காத இவர், பல நடிகர்கள் இவரை திருமணம் செய்வதற்கு முயற்சித்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கணவர் மரணம்
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
கணவர் மரணத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிய மீனாவை அவரது தோழிகள் தான் தேற்றி, வெளியே கொண்டு வந்தனர்.
சமீபத்தில் கூட நடிகை மீனா திரையுலகில் வெற்றிகரமாக 40 வருடங்கள் நிறைவு செய்ததற்கு மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது.
மெல்ல மெல்ல... இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் மீனா தமிழ் புத்தாண்டில் பட்டு புடவையில்... ஜிமிக்கி கம்மலுடன், கொள்ளை அழகுடன் கொடுத்துள்ள கியூட் போசுகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.