திருமணமான நடிகரை காதலித்து கழட்டிவிட்டாரா நடிகை மீனா? கணவர் இறந்த பின்பு எழும் சர்ச்சை
நடிகை மீனா திருமணமான நடிகர் ஒருவரைக் காதலித்ததாக 1990களில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் தற்போது மீண்டும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
நடிகை மீனா
நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் மீனா.
இவர் ரஜினியுடன் பலபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஹீரோயினாகவும் நடித்தார். ஆம் 1990ம் ஆண்டு தமிழில் ஒரு புதிய கதை என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காத இவர், பல நடிகர்கள் இவரை திருமணம் செய்வதற்கு முயற்சித்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்தார்.
ஆனால் 1990களில் இவர் திருமணமான நடிகர் ஒருவரை காதலிப்பதாக வதந்தி வெளியானது. ஆம் மீனா மற்றும் பிரபுதேவா இணைந்து டபுல்ஸ் படத்தில் நடித்த போது, அவர் மீது காதல் ஏற்பட்டதாம்.
மீனாவின் தோழிகளால் தான் இவர் எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த காதல் விவகாரம் அதிகமாக பேசப்படுவதற்கு முன்பு அவரது தோழிகள், பிரபுதேவா ஒரு பிளே பாய் என்றும் அவர் அனைத்து நடிகைகளுடன் இவ்வாறு தான் பேசுவார் என்று கூறியுள்ளார்கள்.
தோழிகளின் பேச்சைக் கேட்டு சுதாரித்துக் கொண்ட மீனா பிரபுதேவாவை கழட்டிவிட்டதாக கூறப்படுகின்றது.