சூப்பர் சிங்கரில் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகை மீனா! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகை மீனா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள காணொளி ப்ரொவாக வெளியாகியுள்ளது.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
பரதநாட்டிய நடனக் கலைஞரான மீனா, சரளமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பேசும் திறனுடையவர்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
இதனால் அதீத மனஉளைச்சலுக்கு ஆளான மீனா, துக்கமான நேரத்திலும் கணவருக்காக இறுதிச்சடங்குகளை அவரே செய்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
மகிழ்ச்சியில் மீனா
தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மீனா கணவர் இறந்த பின்பு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், அவதானித்த ரசிகர்கள் பயங்கர மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்த மீனாவை அவரது நண்பர்கள், தேற்றியுள்ள நிலையில், தற்போது மீண்டு வந்து சூப்பர் சிங்கருக்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.