அஜித் - விஜய் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்து 90ஸ் நடிகை! திக்குமுக்காடி போன தீவிர ரசிகர்கள்
விஜயுடன் இந்த காரணத்தினால் தான் நான் நடிக்கவில்லை என நடிகை மீனா அவர்கள் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை
தமிழ் சினிமாவில் ஆரம்பக்காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை மீனா.
இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திருமணம் செய்யும் வரை சினிமாவில் இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் இருந்த காலப்பகுதியில் அப்போது பிரபலமாக இருந்த அத்தனை நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
ஆனால் விஜயுடன் மட்டும் நடிக்கவில்லை மாறாக ஒரு பாடலில் மட்டும் வந்து குத்தாட்டம் போட்டு சென்றுள்ளார்.
பேட்டியில் உடைக்கப்பட்ட உண்மை
இந்த நிலையில் இது குறித்து சமிபத்தில் ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ஒருவர் “ உங்களுக்கு அஜித்தை மட்டும் தானே பிடிக்கும் அதன் காரணமாக தானே அஜித்துடன் மட்டும் நடித்தீர்கள் ” என கேட்டுள்ளனர்.
அதற்கு மீனா,“ அப்படி எல்லாம் இல்லை. நான் அப்போது பல படங்களை கைவசம் வைத்திருந்தேன். இதனால் தான் நான் விஜய் படங்களில் நடிக்கவில்லை.
மாறாக எனக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத பிரச்சினை மட்டும் தான். மேலும் அஜித்தையும் எனக்கு பிடிக்கும் ” என மறைமுக பதிலளித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் விஜயுடன் நடிக்காதற்கு இது தான் காரணமா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.