நடிகை மீனாவின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
நடிகை மீனாவின் சொத்து மதிப்பு மற்றும் அவரது வீட்டைக் குறித்தும் வெளியான தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
நடிகை மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 15 ஆண்டுகளாக புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தவர் நடிகை மீனா.
நடிப்புக்காக படிப்பை பள்ளிக்கூடத்தில் முடிக்காவிட்டாலும், திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் முதுகலை வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நைனிகா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தெறி படத்தில் அறிமுகமானார். மகள் மற்றும் மனைவியை நடிப்பதற்கு அனுமதித்த வித்யாசாகர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு காலமானார்.
சொத்து மதிப்பு
தற்போது 47 வயதாகும் மீனா படங்களில் குணச்சித்திர ரோல்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோ நடுவர், விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார்.
நடிகை மீனாவுக்கு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக பிரம்மாண்ட வீடு இருக்கிறது. கேரள முறைப்படி அந்த வீட்டை கட்டி இருக்கின்றனர்.
நடிகை மீனா நடிகையாக இருந்தபோது சேர்த்த சொத்து மற்றும் அவரது கணவர் சேர்த்து வைத்த சொத்து என மொத்தமாக 35 முதல் 40 கோடி ருபாய் அளவுக்கு இருக்கிறதாம்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |