மீனாவால் திடீரென கண்ணீர் விட்டு அழுத கலா மாஸ்டர்! பிறந்த நாளில் ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவம்;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர், பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர், மீனாவுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா எனற மகளும் இருக்கிறார்.
இந்நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து தற்போது தான் மெல்ல மெல்லமாக மீண்டு வருகிறார் மீனா.

அண் மையில் கூட தனது உடலை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், 18வது திருமன நாளை கலா மாஸ்டர் நேற்று கொண்டாடிய நிலையில் அந்த விழாவுக்கு வரும்படி மீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், அதற்கு மீனா தான் ஊரில் இல்லை என கூறியதால் கலா மாஸ்டர் வருத்தம் அடைந்துள்ளார். அதன் பின்னர், கலா மாஸ்டர் தனது திருமண நாளை கொண்டாடி கொண்டிருக்ருக்கும்போது திடீரென மீனா வருகை தந்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், கலா மாஸ்டரின் திருமண நாள் விழாவில் மீனா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் தீயாய் பரவி வருகிறது.