viral Photos : அப்படியே நைனிகாவை போல இருக்கும் மீனாவின் சிறு வயது புகைப்படங்கள்
தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் மீனாவின் நடிகை மீனாவின் சிறுவயது அரிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படங்கள்
திரை உலகில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, தன்னுடைய அதிர்ஷ்டத்தால் புகழ்பெற்ற நடிகையாக வளர்ந்தவர் தான் மீனா. ஒரு திருமண விழாவில் தாயுடன் கலந்து கொண்டபோது, பிரபல நடிகர் சிவாஜி கணேசன், அந்த நிகழ்ச்சியில் தற்செயலாக மீனாவைப் பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் நடித்து வந்த ‘நெஞ்சங்கள்’ திரைப்படத்திற்காக, ஒரு குழந்தை நட்சத்திரத்தை இயக்குநர் மேஜர் சுந்தர்ராஜனும், தயாரிப்பாளர் விஜயகுமாரும் தேடி வந்த சூழலில், மீனாவை பார்த்தவுடன், "இந்தக் குழந்தை அந்த கதாபாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வாக இருக்கும்" என்று நினைத்த சிவாஜி கணேசன், மீனாவின் தாயிடம், “உங்கள் மகளுக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கலாமா?” என்று நேரடியாக கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி சினிமாவில் மேலும் வளர்ந்தார் நடிகை மீனா. 90களில் முன்னணி கதாநாயகியாக மாறிய மீனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த எஜமான், முத்து, வீரா, போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தன.
இந்த நிலையில் இவரின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு நெட்டிசன்கள் மகளை போலவே உள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |