மீனாவை திருமணம் செய்ய கேட்ட ரசிகர்: செம்ம கூலாக மீனா கொடுத்த பதில் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம்வரும் மீனா ரசிகர்களின் கேள்விக்கு அளித்துள்ள பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தனது இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் மீனா, தனது ரசிகர்களுக்கு சமீபத்தில் கேள்வி பதில் செஷனை நடத்தியுள்ளார்.
இதில் ரசிகர்களிடமிருந்து சுமார் பத்தாயிரம் கேள்விகளைப் பெற்ற மீனா சில கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி பதில் அளித்துள்ளார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடிகை மீனா சில சிக்கலான கேள்விகளுக்கு கூட பொறுமை இழக்காமல், கோபப்படாமல் பக்குவமாக லேசான முறையில் பதிலளித்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்து கொஞ்சம் லேட் என்று கண்சிமிட்டும் ஃபன் எமோஜியுடன் வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார்.
தனது வயது எவ்வளவு என்று வயதை பற்றி கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு “பெண்களின் வயதைக் கேட்பது நாகரிகமானதல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா” என்று மேற்சொன்ன அதே ஃபன் எமோஜியை பதிவிட்டு வேடிக்கையாக பதில் அளித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் என்னைக்காவது சினி ஃபீல்டுக்கு எதுக்காக வந்தோம்னு ஃபீல் பண்ணி இருக்கீங்களா.? என்று எழுப்பிய கேள்விக்கு "பல தடவ" என்று கண்ணில் கண்ணீர் வர சிரிக்கும் எமோஜியுடன் பதில் கூறி உள்ளார் நடிகை மீனா.
மற்றொரு ரசிகர் நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதற்கு, நல்ல ஆசை என்ற பொருள்படும்படி 'Awww 'என்று குறிப்பிட்டுள்ளார் மீனா.
தனுஷ் அல்லது சிம்பு இருவரில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக இருவரும் என்று பதில் அளித்துள்ளார். தமிழில் பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று பதில் அளித்துள்ளார்.
இது தவிர அவர் தனது நடிப்பில் வரவிருக்கும் படங்கள், திரைப்படத் துறை அனுபவம் மற்றும் அவரது மகள் நைனிகா பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.