தவளை விஷத்தால் நடந்த விபரீதம்.. இளம் நடிகையின் மரணத்திற்கு என்ன காரணம்?
மெக்சிகோவில் பாரம்பரிய Kambo மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா (Marcela Alcázar Rodríguez) தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Kambo சடங்கு
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ Kambo மத சடங்கு மிக பிரபலமாக நடக்கும்.
இந்த சடங்கு செய்வதால் உடல் தூய்மைப்படுத்துவதாக அந்த இன மக்கள நம்புகிறார்கள். அத்துடன் சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்.
இதனை தொடர்ந்து அந்த காயங்களின் விஷத்தன்மை கொண்டதாக தவளைகளின் சளி தடவப்படும். இது நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்கின்றது என்பது காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.
இந்த நிலையில், விஷத்தன்மை கொண்ட சளி இரத்த அழுத்தத்தை அதிகரித்து வாந்தி மற்றும் வயிற்றுபோக்கை ஏற்படுத்தும். இதனை தடவிய பின்னர் மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்குதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இவை அனைத்தும் சுமாராக அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.
நடிகையின் மரணத்திற்கான காரணம்
சடங்கு தொடங்கிய உடன் நடிகை மார்செலாவுக்கு அசௌகர்யமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இது உடலை சுத்தப்படுத்தும் செயன்முறையாக பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர், மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு சாமியாரால் சடங்கு செய்யப்பட்டது.
நடிகையின் நிலை கொஞ்சம் மோசமானதும் சாமியார் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. தோழி ஒருவர் உதவிக்கு வந்த போது நடிகை மார்செலாவுக்கு தவளை விஷத்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து குறித்த சாமியார் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |