Photo Album: நெற்றி நிறைய குங்குமம்.. பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் புது லுக்
ஐஸ்வர்யா தத்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐஸ்வர்யா தத்தா
தமிழ் சினிமாவில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
இதனை தொடர்ந்து, கோலிவுட் படங்களில் பெரிதாக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சின்னத்திரையில் களமிறங்கினார்.
அந்த வகையில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா அதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா தத்தா.
மீண்டும் கோலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்தாண்டு “காபி வித் காதல்” படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இரும்பன், கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் இன்னும் 4 படங்களில் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போயஸ் கார்டனில் பங்களா, Rolls royce கார்கள் என கோடிகளில் புரளும் ரஜினிகாந்த்- சொத்து மதிப்பு எவ்வளவு?
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா நெற்றி நிறைய குங்குமம், பட்டுபுடவை என மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யாவின் புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |