46 வயதிலும் இளசுகளை கட்டிப்போடும் மஞ்சு வாரியர்- அழகின் ரகசியம் என்ன தெரியுமா?
45 வயது கடந்தும் இளசுகளை கட்டிப்போடும் அழகில் மஞ்சு வாரியரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் டாப் நாயகியாக இருந்து வரும் நடிகை தான் நடிகை மஞ்சு வாரியர்.
இவர், சினிமாவில் பல சாதனை செய்தாலும் அவரது நிஜ வாழ்க்கை சரியாக அமையவில்லை.
திலீப் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஆனாலும் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
தற்போது தனியாக தனது தாயாருடன் வாழ்ந்து வரும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டார்.
46 வயதிலும் குறையாத அழகு
இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் எடை அதிகரித்து பார்க்கவே அடையாளம் தெரியாமல் இருந்த இவர், விவாகரத்திற்கு பின்னர் எடையை குறைத்து இளம் நடிகைகளுக்கு சவால் விடும் லுக்கில் இருக்கிறார்.
அடுத்தடுத்து திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சு வாரியர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் பார்க்கும் பொழுது மஞ்சு வாரியருக்கு 46 வயது ஆகிறது என யாராலும் கூற முடியாது. தன்னுடைய எடை குறைப்பு தொடர்பாக பேசிய மஞ்சு வாரியர், “ஆயில் சேர்க்காத உணவுகளை மட்டும் தான் தினமும் சாப்பிடுகிறாராம். அப்படி எண்ணெய் தேவையான உணவில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மாத்திரம் சேர்க்கிறார்.
உடல் எடையை குறைக்க டான்ஸ் பெரிதும் உதவியுள்ளது. டான்ஸ் ஆடி ஆடி தாகம் எடுக்க ஒரு நாளைக்கு 8 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பாராம். அதன்பின்னர் தினமும் 1 மணி நேரம் யோகா செய்வாராம், யோகா முடித்த பின்பு வாக்கிங் செல்வாராம்..” எனக் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
