எப்படி இருந்தவங்க இப்டி மாறிடாங்களே! நடிகை மனிஷா கொய்ராலா வைரல் புகைப்படம்
இந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், மனிஷா கொய்ராலா தற்போது பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனிஷா கொய்ராலா
இந்திய நடிகைகளுள், முக்கிய இடத்தை பிடித்தவராக இருந்தவர் மனிஷா கொய்ராலா. இவர் இந்தி, தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் இவர் தான் ஹிட்டான ஹீரோயின்.
இவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனிஷா கொய்ராலா, 1989ல் நேபாள மொழிப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தின் மூலமாக சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்தார். அதிலும் இவர் நடித்த ‘உயிரே’ திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இவர் நேபாளத்தை பிறப்பிடமாக கொண்டுள்ளார். தமிழ் இந்தியை தவிர இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார்.
தமிழில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். இதனால் இன்றுவரை இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தனுஷிற்கு மாமியாராக ‘மாப்பிள்ளை’ படத்தில் நடிததன் பின்னர் இவரை பெரிதாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை.
மனிஷா கொய்ராலா, சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு சில வருடங்களுக்கு பின்னர் மீண்டு வந்துள்ளார். இப்போது இவருக்கு 55 வயது.

இந்த நிலையில் வயதானாலும் ஸ்டைல் இன்னும் மாறவில்லையே என்பதற்கிணங்க இவருடைய தற்போதைய புகைப்படம் உள்ளது. இதை பார்த்த பலர், “நம்ப மனிஷா கொய்ராலாவா இது!” என்று கேட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் எப்படி இருந்தாங்க இப்படி மாறிடாங்க என்று பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |