Photo album: 50 வயது தாண்டியும் இன்னும் குறையாத அழகில் மனிஷா கொய்ராலா- எப்படி இருக்காரு பாருங்க
50 வயது தாண்டியும் இன்னும் குறையாத அழகில் இருக்கும் மனிஷா கொய்ராலா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மனிஷா கொய்ராலா
90 காலகட்டங்களில் இந்திய அளவில் பிரபலமாக இருந்தவர் நடிகை தான் மனிஷா கொய்ராலா.
இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த மனிஷா கடந்த 1995-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்‘ திரைப்படத்தின் மூலம் கோலிவுட் அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா என கமல், ரஜினி வரை ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மனிஷாவின் சினிமா வாழ்க்கையில் தோல்விகள் வர ஆரம்பித்தது. அதே சமயம் மது பழக்கத்திற்கு அடிமையானார். அத்துடன் கேன்சர் நோயால் அவஸ்தைபட்டு வந்தார்.
54 வயதிலும் குறையாத அழகு
இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் நோயில் இருந்து மீண்டு வந்த மனிஷா தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அத்துடன் போட்டோஷூட்களிலும் ஆர்வமாக இருக்கிறார்.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “54 வயதில் மனிஷா இவ்வளவு அழகாக இருக்கிறாரா?” என நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
