ஒரு தவறு செய்ததால் மொத்தமாக முடங்கிய முதல்வன்பட நடிகையின் சினிமா வாழ்க்கை....
நடிகை மனிஷா கொய்ராலா தன் வாழ்க்கைப்பயணத்தில் சில தவறுகளை செய்ததால் அவர் நடித்த 50 ற்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியை சந்தித்தது.
மனிஷா கொய்ராலா
90 களின் சிறந்த ஒரு நடிகையாக பொதுவாக இளைஞர்களின் மனதில் ஒரு தீராத இடத்தை பிடித்து வைத்திருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் 1991 ஆம் ஆண்டு ‘சவ்தகர்’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார்.
இவர் நடித்த இந்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதன் பின்னர் தழிழிலும் அறிமகமானார் இவர். தமிழில் இந்தியன், ஆளவந்தான், முதல்வன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படி புகழின் உச்சிக்கு சென்ற மனிஷா கொய்ராலாவின் படங்கள் தோல்வியை சந்தித்தது. இதனால் சினிமாத்துறையில் இவரின் மார்கட் குறைய ஆரம்பித்தது. ஒரே நேரத்தில் அவர் நடித்த 50 படங்களுமே தோல்வியை சந்தித்தது.
இதனால் இவர் மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்த பழக்கத்தால் படவாய்ப்புகளையும் அவர் இழந்தார். இதனை தொடர்ந்து அந்த சமயத்தில் இவை பற்றி பல செய்திகளும் பரவின.
அப்போது வெளியான செய்திகளில் மனிஷா கொய்ராலா 12 பிரபலங்களுடன் உறவில் இருந்தாரென்று கூறப்பட்டது. பல விமர்சனங்களும், வதந்திகளும் அவரை சுற்றி வந்தது. 2010 ஆம் ஆண்டு சாம்ராட் தாஹல் என்பவரை திருமணம் செய்து கொண்ட மனிஷா இரண்டே ஆண்டில் அவரை விவாகரத்தும் செய்தார்.
இப்படியாக இவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் பல இன்னல்களை சந்தித்தார். இதை அடுத்து ஹீராமண்டி வெப் தொடரின் மூலம் மாஸ் ரீ - எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வெப் தொடர் பிளாக்பஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.