மகாராஜா பட நடிகைக்கு இப்படியொரு நோயா? முகமெல்லாமல் மாறி இப்போ எப்படி இருக்காரு பாருங்க!

DHUSHI
Report this article
மகாராஜா பட நடிகைஅரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மம்தா மோகன்தாஸ்
தமிழை போல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மம்தா மோகன்தாஸ்.
இவர் நடிப்பது மட்டுமின்றி பாட்டு பாடுவது, படங்கள் தயாரிப்பது என பன்முகத்திறமை கொண்டவராக பார்க்கப்படுகிறார். அத்துடன் மம்தா கர்நாடக் இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறையாக கற்றுக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மம்தா- விஷால் நடிப்பில் வெளியான “சிவப்பதிகாரம்” என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.
திருமணம்
மலையாளத்தை போல் தமிழிலும் ஒரு வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், கடந்த 2011-ம் ஆண்டு பஹ்ரைனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் நாளடைவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
மம்தா மீண்டும் சினிமா பக்கம் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா என்ற படத்திலும் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
அரியவகை நோய்
சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மம்தா அவருடைய இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். அதில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இதன்படி, அவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அந்த புகைப்படத்தில் விட்டிலிகோ என்ற அரியவகை நோயிற்கு விழிப்புணர்வு கொடுத்துள்ளார். அத்துடன் மம்தாவிற்கும் இந்த நோய் இருப்பது கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |