உடல் மெலிந்து பரிதாப நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் மகள் - 20 மருத்துவர்களால் தீவிர சிகிச்சை! பதறும் ரசிகர்கள்
நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும், வீட்டில் ஓணம் கொண்டாடியதாக மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது.
கடைசி மகளான ஷ்ரேயா இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளார்.
இவருக்கு கடந்த 6 மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் உள்ளதாகவும், 20 மருத்துவர்கள் சேர்ந்து சிகிச்சை அளித்தபின்னர் தற்போது சற்று உடல்நலம் தேறி இருப்பதாகவும், எனினும் முழுமையாக அவர் குணமடையவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் இவருக்கு என்ன பிரச்சனை என்பதை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவிக்கவில்லை.
எனவே இந்த வருட ஓணம் பண்டிகையை மிக சிறிய அளவிலேயே தங்களுடைய வீட்டில் கொண்டாடியதாக இது குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் ஸ்ரேயா மிகவும் உடல் இளைத்து காணப்படுகிறார். மகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றாலும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், இருக்கும் இவருக்கு ரசிகர்களும் தொடர்ந்து, தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன் கணவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.