மாடர்ன் உடையில் அழகு சிலையாக நடிகை குஷ்பு: புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்
கடந்த சில நாட்களாக மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை குஷ்பு தற்போது அடுத்த அட்டகாசமான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
எப்பொழுதும் சேலையில் குண்டாக காணப்படும் இவர், தற்போது உடல் எடையினைக் குறைத்து, 18 வயது மங்கை போன்று காணப்படுகின்றார்.
தற்போதும் இவர் கருப்பு நிற மாடர்ன் உடையினை அணிந்து அட்டகாசமான மேக்கப்பில் பெண்களே பொறாமை கொள்ளும் அளவில் காணப்படுகின்றார். கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக செல்லவுள்ளதாக கூறியுள்ளார். குறித்த புகைப்படம் இதோ.